விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா
விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா;
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று பிளஸ்-1 மாணவர்களுக்கு விலையில்லா ைசக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் ம.தி.மு.க. கட்சியின் மாநில மீனவர் அணி செயலாளர் பேட்ரிக் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பேட்ரிக், பிளஸ்-1 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துமலர், பள்ளியின் பொருளாளர் மஜீத் கான், வார்டு உறுப்பினர்கள் சரண்யா, மணிமேகலை, பள்ளி எஸ்.எம்.சி. தலைவி பிரகாசி, பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியை ஜெயசுதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் 62 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.