செங்கல்பட்டு மாவட்டத்தில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

Update: 2023-07-27 09:02 GMT

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2022-2023-ம் கல்வியாண்டில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி, நகர மன்ற துணைத்தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா ைசக்கிள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் (இடைநிலை), நகர மன்ற உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்