மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கொள்ளிடம் துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்.;

Update: 2022-09-08 18:01 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

விலையில்லா சைக்கிள்

கொள்ளிடம் துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் வரவேற்றார் .ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் பானுசேகர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 130 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிக நிதி ஒதுக்கீடு

வேறு எந்த துறைக்கும் இல்லாத அளவு பள்ளி கல்வித்துறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றார்.இதில் கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்ல சேதுரவிக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் செல்வராசு, மாவட்ட கவுன்சிலர் விஜயபாரதி. பள்ளி மேலாண்மை குழு தலைவர் மீனாட்சி, ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சரண்யா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்