மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.;
இட்டமொழி:
ஏர்வாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருக்குறுங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, தளபதிசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி, நாங்குநேரி சங்கர்ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, இலவச சைக்கிள்களை வழங்கினார். மேலும் 10, 11, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் நம்பித்துரை, திருக்குறுங்குடி பேரூராட்சி தலைவர் இசக்கித்தாய் ஞானசேகர், மறுகால்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் சாந்தகுமாரி செல்லையா, வட்டார தலைவர்கள் ராமஜெயம், வாகைதுரை, நளன், நகர தலைவர் ரீமாபைசல், ராசாத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.