570 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்; எம்.எல்.ஏ. வழங்கினார்

களக்காடு பகுதியில் 570 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.;

Update: 2023-07-14 18:52 GMT

இட்டமொழி:

களக்காடு பகுதி பள்ளிகளில் தமிழக அரசின் இலவச சைக்கிள்களை தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார். அதன்படி களக்காடு கோமதி அருள்நெறி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 23 மாணவிகளுக்கும், களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 395 மாணவர்களுக்கும், களக்காடு த.அ.மொ.பீ. மீரானியா மேல்நிலைப்பள்ளியில் 53 மாணவர்களுக்கும், இடையன்குளம் அமீர்ஜமால் மேல்நிலைப்பள்ளியில் 99 மாணவர்களுக்கும் என மொத்தம் 570 மாணவ-மாணவிகளுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. சைக்கிள்களை வழங்கினார்.

மேலும் அந்தந்த பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்புகளில் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்தி பேசினார். முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், மாவட்ட துணைத்தலைவர்கள் சந்திரசேகர், கக்கன், நகர தலைவர் ஜார்ஜ் வில்சன், வட்டார தலைவர் அலெக்ஸ், கவுன்சிலர் மீகா, தலைமை ஆசிரியர்கள் ஞானசெல்வம், ராஜேஷ் பெல்மேன்நல், யாகத் அலிகான், முகைதீன் பிள்ளை மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மூலைக்கரைப்பட்டி பூமகள் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் புதுமண தம்பதியருக்கான பணியரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கு ஏற்றி புதுமண தம்பதியருக்கான ஊட்டச்சத்து கண்காட்சியை பார்வையிட்டார். காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் கு.பார்வதிமோகன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பர்வதராணி, ஐ.சி.டி.எஸ். திட்ட அலுவலர் இந்திரா, டாக்டர் வினித், கவுன்சிலர் மரியசாந்தி, வட்டார தலைவர் வாகைதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்