1,476 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

1,476 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை அமலுவிஜயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2022-09-05 17:42 GMT

குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 274 மாணவிகள், திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 607 மாணவர்கள், நேஷனல் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 595 மாணவர்கள் என மொத்தம் 1,476 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்கள் ஜி.புருஷோத்தமன், பாலசுப்பிரமணியன், நகர மன்ற உறுப்பினர்கள் நவீன்சங்கர், ஜாவீத்அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசீலிகிறிஸ்டி வரவேற்றார்.

குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மூன்று பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரிய- ஆசிரியைகள், அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சரளாதேவி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்