தொழிலில் லாபம் தருவதாக கூறி ரூ.39¾ லட்சம் மோசடி

தொழிலில் லாபம் தருவதாக கூறி ரூ.39¾ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-12-06 21:07 GMT

ஒருங்கிணைப்பாளர் பணி

திருச்சி பீரங்கிகுள தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் திருச்சி பாலக்கரை மைக்கேல் பிள்ளை தெருவை சேர்ந்த உதயகுமார் (வயது 27) என்பவரிடம், தான் பெங்களூருவில் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் வேலை பார்ப்பதாக கூறியுள்ளார்.

மேலும் ரூ.40 ஆயிரம் கட்டினால், தினமும் ரூ.800 கிடைக்கும் வகையில் வீட்டில் இருந்து இணையதளம் வழியாக தொழில் செய்ய அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், மேலும் அந்த பணிக்கு அவரை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

ரூ.39¾ லட்சம் மோசடி

இதைத்தொடர்ந்து ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் தரும்படி பார்த்திபன் கேட்டுள்ளார். இதனை நம்பிய உதயகுமார் பல்வேறு தவணைகளாக பார்த்திபனின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி உள்ளார். பின்னர் அந்த தொழிலில் கூடுதல் லாபம் தருவதாக பார்த்திபன் கூறிய ஆசை வார்த்தையை நம்பி, மேலும் ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை அவரது வங்கி கணக்கில் உதயகுமார் செலுத்தியுள்ளார்.

ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. மேலும் இதுபோன்று பலரிடம், தொழிலில் லாபம் தருவதாகவும், மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமித்திருப்பதாகவும் கூறி பார்த்திபன் பணம் பெற்றதாகவும், இதன்படி அவர் உள்பட 17 பேரிடம் மொத்தம் ரூ.39 லட்சத்து 71 ஆயிரத்தை அவர் பெற்றுள்ளதாகவும் உதயகுமாருக்கு தெரியவந்தது.

வழக்கு

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த உதயகுமார், இந்த சம்பவம் தொடர்பாக மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பார்த்திபன் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்