நண்பரிடம் கடன் வாங்கி ரூ.9½ லட்சம் மோசடி:தேங்காய் வியாபாரி கைது

உத்தமபாளையத்தில் நண்பரிடம் கடன் வாங்கி ரூ.9½ லட்சம் மோசடி செய்த தேங்காய் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-07-13 18:45 GMT

உத்தமபாளையம் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் அப்துல்சலீம் (வயது 47). இவர் சொந்தமாக வாடகை கார் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த முகமது பாசீத் (47) என்பவரும் நீண்டகால நண்பர்கள். முகமது பாசீத் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக அவர், அப்துல் சலீமிடம் ரூ.10 லட்சம் கடன் கேட்டார். அதற்கு அவர் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதால் இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் அப்துல்சலீம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது பாசீத்தை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்