கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி; 3 பேர் கைது

தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி; 3 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-08-25 18:02 GMT

மயிலாடுதுறை கூறைநாட்டை சேர்ந்த சண்முகவேல் மகன் மணிகண்டன் (வயது 38). இவரது செல்போனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் புதுச்சேரியில் இருந்து சுந்தர பாண்டியன் என்பவர் பேசி உள்ளார். அப்போது அவர், தான் பிரபலமான தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், தங்களுக்கு கடன் வாங்கி தருவதாகவும், அதற்கு பரிவர்த்தனை கட்டணமாக ரூ.6 ஆயிரம் கட்டவேண்டும் என கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய மணிகண்டன், சுந்தரபாண்டியன் கூறிய வங்கி கணக்கில் பணம் செலுத்தியுள்ளார். ஒரு சில நாட்கள் கழித்து சுந்தரபாண்டியன் கூறியதாகவும் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் என்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வெண்ணங்குழியை சேர்ந்த சஞ்சய் என்பவரும், அதன் பிறகு, அதே பகுதியைச் சேர்ந்த சித்தார்த்தன் என்பவரும். காட்டுமன்னார்குடியை சேர்ந்த சைய்யது அப்துல்லா என்பவரும் ஒரு வாரம் இடைவெளியில் மணிகண்டனிடம் செல்போனில் பேசி பணம் கேட்டுள்ளனர். பணத்தை ஆன்லைன் மூலம் கட்டசொன்னதால் சிறிது சிறிதாக ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் வரை பணம் செலுத்தியுள்ளார். பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக அறிந்த மணிகண்டன் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார் போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோரின் அறிவுறுத்தலின் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாஆத்மநாதன் தலைமையில் தனிப்படை அமைத்து சஞ்சய் (22) சித்தார்த்தன் (20), காட்டுமன்னார்கோவில் சையது அப்துல்லா (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு மடிக்கணினி, 16 செல்போன்கள், 23 சிம் கார்டு, செக் புக், ரூ.50 ஆயிரம்ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள சுந்தர பாண்டியனை தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்