ஓசூரில் என்ஜினீயரிடம் ரூ.1 லட்சம் மோசடி

தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓசூரில் என்ஜினீயரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-10-18 19:27 GMT

ஓசூர்

ஓசூர் அருகே பாகலூர் சாலையில் உள்ள ஜீமங்கலத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது 26). தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரை, ஓசூர் நியூ ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த தபரீஷ் (27) என்பவர் சந்தித்தார். அப்போது அவர் ஓசூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பிரவீனிடம் கூறினார்.

மேலும் அதற்காக ரூ.1 லட்சமும் பெற்றுக் கொண்டார். ஆனால் சொன்னபடி தபரீஷ் வேலை எதுவும் வாங்கி கொடுக்கவில்லை. இதையடுத்து கொடுத்த பணத்தை பிரவீன் கேட்ட போது பணத்தை தர தபரீஷ் மறுத்தார். இந்த மோசடி குறித்து தபரீஷ் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தபரீசை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்