4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

தஞ்சை அருேக அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-01-31 21:16 GMT

வல்லம்;

தஞ்சை காமாட்சி அம்மன் தோட்டம் அருகே கள்ளப்பெரம்பூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.அப்போது அங்குள்ள வெண்ணாற்றங்கரை வழியாக ஆற்று மணலை அனுமதியின்றி ஏற்றி வந்த மாட்டு வண்டிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதில் தஞ்சை மேலவீதியை சேர்ந்த முருகானந்தம் என்பவரை போலீசார் பிடித்தனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் அங்கேயே மாட்டு வண்டிகளை விட்டுவிட்டு 3 பேர் தப்பி ஓடிவிட்டனா். இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மணல் கடத்தி வர பயன்படுத்தப்பட்ட 4 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்