ரூ.15 லட்சத்தில் சுகாதார வளாகம் அடிக்கல் நாட்டு விழா
திசையன்விளை மார்க்கெட்டில் ரூ.15 லட்சத்தில் சுகாதார வளாகம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது
திசையன்விளை:
திசையன்விளை பேரூராட்சி தினசரி மற்றும் வாரச்சந்தை வளாகத்தில் நேரு திடல் பின்புறம் ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் 6 சுகாதார வளாகங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். துணைத்தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலர்கள் உதயா, ஜோஸ்பின் சரஸ்வதி, பிரேம்குமார், பிரதிஷ்குமார், சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.