சிமெண்டு சாலைகள் அமைக்க அடிக்கல் நாட்டு விழா
சிமெண்டு சாலைகள் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.;
நெமிலி
சிமெண்டு சாலைகள் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்தில் உள்ள பிள்ளைப்பாக்கம், வேளியநல்லுர், ஜாகீர்தண்டலம், கண்டிகை, மேல்வெண்பாக்கம், அசநெல்லிகுப்பம், காட்டுகண்டிகை உள்ளிட்ட கிராமங்களில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டி அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.52 லட்சம் ஒதுக்கீடு செய்து சிமெண்டு சாலைகள் அமைக்க அந்தந்த கிராமங்களில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தீனதயாளன் முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதைத் தொடர்ந்து வேளியநல்லூர் கிராமத்தில் நடைபெற்று வரும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் குளம் வெட்டும் பணி, பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளிக்கு ரூ.12 லட்சத்தில் வகுப்பறைகள், புனரமைப்பு பணிகளையும் ஒன்றியக்குழு தலைவர் வடிவேல் பார்வையிட்டார்.