பார்வர்ட் பிளாக் பொதுக்கூட்டம்

சோழவந்தான் அருகே பார்வர்ட் பிளாக் பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-10-22 18:45 GMT

சோழவந்தான், 

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பஸ் நிலையம் முன்பாக பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. வல்லரசு 23-ம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் தலைமை தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ. வல்லரசு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். மாநில குழு உறுப்பினர் செல்லம்பட்டி, ஒன்றிய முன்னாள் தலைவர் எல்.எஸ்.இளங்கோவன், மாநில குழு உறுப்பினர் வக்கீல் இளையரசு, இளைஞர் அணி மாநில செயலாளர் ஆர்.கே.சாமி, மாவட்ட செயலாளர் மணிகண்டன், அமைப்பு செயலாளர் ரவி, வடக்கு ஒன்றிய செயலாளர் விருமாண்டி ஆகியோர் இப்பகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. வல்லரசு கொண்டு வந்த திட்டங்களான 58 கால்வாய் திட்டம், விக்கிரமங்கலம் கிராமத்தில் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பணிகள் குறித்து பேசினர். வருகிற தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்று பேசினார்கள். தவசி, அகிலன் உள்பட இப்பகுதியை சேர்ந்த பார்வர்ட் பிளாக் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சி தலைமையில் போலீசார் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்