பார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு
வெள்ள பாதிப்புக்கு மத்தியில் கார் பந்தயம் நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதால், கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.;
சென்னை,
சென்னையில் கடந்த 9 , 10ஆம் தேதிகளில் நடைபெற இருந்த பார்முலா 4 கார் பந்தயம் மிக்ஜம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது . இந்தப் போட்டிகள் தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றியிருக்கும் 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டது.
சென்னையில் வெள்ள பாதிப்புக்கு மத்தியில் கார் பந்தயம் நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதால், கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து பார்முலா 4 கார் பந்தயம் 14 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.