பார்முலா 4 கார் பந்தயம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டிய பாஜக நிர்வாகி
தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா தெரிவித்துள்ளார்.;
சென்னை,
சென்னை தீவுத்திடலில் நேற்று முன்தினம் தொடங்கிய பார்முலா 4 கார் பந்தயம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, பாஜக நிர்வாகியும், பைக் ரேஸருமான அலிஷா அப்துல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
"சென்னையில் இப்போது பார்முலா 4 கார் பந்தயம் முக்கியமா என நிறைய பேர் கேட்கின்றனர். ஒரு வீராங்கனையாக பார்த்தால் இது முக்கியம்தான். தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர் நன்றாக உதவி செய்கிறார் என்பதை மறுக்க முடியாது. சென்னையின் மையப்பகுதியில் கார் பந்தயம் வைப்பது என்பது சுலபமான விஷயம் அல்ல. அனைத்து பிரச்சினைகளையும் கடந்து அவர் இதைச் செய்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.