முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

Update: 2022-12-26 19:45 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் அணைக்குடம், பொற்பொதிந்தநல்லூர், சிலால், உதயநத்தம், சோழமாதேவி ஆகிய இடங்களில் முக்கிய சந்திப்புகளில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பா.ஜ.க. மாவட்ட செயலாளர் இளையராஜா ஏற்பாட்டின் பேரில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவருடன் அணி பிரிவு பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்