கயானா நாட்டு முன்னாள் பிரதமர் மாமல்லபுரம் வருகை - புராதன சின்னங்களை ரசித்து பார்த்தார்

கயானா நாட்டு முன்னாள் பிரதமர் மோசஸ் வீராசாமிநாகமுத்து மாமல்லபுரத்திற்கு நேற்று சுற்றுலா வந்தார்.

Update: 2023-01-14 08:58 GMT

முன்னதாக கடற்கரை கோவிலுக்கு வந்த அவரை உலக தமிழ்ச்சங்க பிரதிநிதி டி.இளங்கோவன், பப்ளிக் (பொது) போலீஸ் அமைப்பின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ஜி.ரங்கசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். கடற்கரை கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சிற்பங்களையும் பார்த்த பிறகு சுற்றுலா வழிகாட்டிகள் அவருக்கு மாமல்லபுரம் வரலாற்று சின்னங்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய சுற்றுலா தகவல் புத்தகங்களை வழங்கினர் பிறகு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோவிலின் எழில்மிகு தோற்றத்தை கலை நயத்துடன் கண்டுரசித்தார்.

கடல் உப்பு காற்று அரிக்காத வகையில் எப்படி கடற்கரை கோயில் பழமை மாறாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போன்ற தகவல்களை விரிவாக விளக்கி கூறினார். இறுதியில் கடற்கரை கோவிலின் அனைத்து சிற்பங்களை ரசித்து பார்த்த அவர் அங்கு நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். கயானா நாட்டு முன்னாள் பிரதமர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்