கார் விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன்
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நாகப்பட்டினம்,
முன்னாள் அமைச்சரும் தற்போதைய வேதாரண்யம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ்.மணியன் இன்று வேதாரண்யத்தில் இருந்து கீழ்வேளூருக்கு காரில் புறப்பட்டார். காரில் முன்இருக்கையில் ஓ.எஸ்.மணியன் அமர்ந்திருந்தார். காரை அவரது டிரைவர் ஓட்டினார்.கார் கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்றபோது குறுக்கே இருசக்கர வாகனம் ஒன்று வந்தது. இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பினார். டிரைவர் காரை திருப்பியுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த மதில் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்தில் கார் முன்பக்க பகுதி மற்றும் கோவில் மதில் சுவர் பலத்த சேதமடைந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.