காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறையினர் நடவடிக்கை

விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-09-03 15:05 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் பொரங்காடு சீமை படுகர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், ஹரிச்சந்திரன், செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சிவசுப்பிரமணி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் நடத்துவது, படுக அகராதி (டிக்சனரி) வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது. பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் ரூ.30 விலை நிர்ணயம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது விளை நிலங்களை சேதப்படுத்தி நாசம் செய்து வரும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர்ப் பகுதியில் உலா வரும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்