தளி
வன உயிரின வார விழாவை முன்னிட்டு திருமூர்த்திமலையில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேஷ்ராம் தலைமையில் சுற்றுலா பயணிகளுக்கு வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:-
திருமூர்த்தி அணையின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பஞ்சலிங்க அருவி 2049 மீட்டர் உயரத்தில் உள்ள பிச்சிச்சி மலையில் உள்ள சோலைக் காடுகளில் உற்பத்தியாகி பல கிளை, ஓடைகள் சேர்ந்து பஞ்சலிங்க அருவியாக திருமூர்த்திமலையை வந்தடைகிறது.
எனவே சோலைக்காடுகளை காப்பாற்றுவது இன்றியமையாத கடமையாகும்.மேலும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் மூலம் வெளியேறும் கார்பன் போன்ற கரிம வாயுக்களை மரங்கள் தங்களின் இலைகளில் சேமித்து வைப்பதன் மூலம் ஓசோன் படலம் சேதமடையாமல் பாதுகாக்கிறது. இதனால் மனிதர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் இதர நோய்களில் இருந்து காப்பாற்றுகிறது. இதுபோன்ற பல்வேறு பயன்கள் தரும் மரங்களை உருவாக்குவது வன உயிரினங்கள் தான். எனவே வனம் மற்றும் வன உயிரினங்களை காப்பாற்றுவது நமது தலையாய கடமையாகும்.
இவ்வாறு கூறினார்.