சபரிமலை செல்லும் வாகனங்களுக்குஒருவழிப்பாதை இன்று முதல் அமல்:தேனி போலீஸ் சூப்பிரண்டு தகவல்

சபரிமலைக்கு செல்லும் வாகனங்களுக்கு கம்பம்மெட்டு வழியாக ஒருவழிப்பாதை இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.;

Update: 2022-12-22 18:45 GMT

ஒருவழிப்பாதை

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர ஜோதி விழா வருகிற 14-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தேனி மாவட்டம், கூடலூர், குமுளி வழியாக சபரிமலைக்கு தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் சென்று வருகின்றனர். பக்தர்களின் வாகன எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், வாகன நெரிசலை தவிர்க்கவும் சபரிமலை செல்லும் வாகனங்களுக்காக கம்பம் மெட்டு மலைப்பாதை ஒவ்வொரு ஆண்டும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு வந்தது.

இந்த ஆண்டும் பக்தர்களின் நலன் கருதி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜனவரி 14-ந்தேதி வரை சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு ஒருவழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

வழித்தடம்

அதன்படி தேனியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் வாகனங்கள் சின்னமனூர், கம்பம், கம்பம்மெட்டு, கட்டப்பனை, வாகமன், ஏலப்பாறை, குட்டிகானம், பூத்துக்குழி, முண்டகயம், எருமேலி, பம்பை வழியாக அய்யப்பன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

சபரிமலையில் இருந்து திரும்பும் வாகனங்கள் பம்பை, குட்டிக்கானம், பீர்மேடு, பாம்பனாறு, வண்டிப்பெரியார், குமுளி, கூடலூர், கம்பம், சின்னமனூர் வழியாக தேனி வர வேண்டும். இந்த போக்குவரத்து வழித்தட மாற்றத்தை ஒழுங்குப்படுத்தும் வகையில், பக்தர்களின் வாகனங்களுக்கு வழித்தடம் மற்றும் தகவல்கள் தெரிவிப்பதற்காக முக்கியமான சாலை சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்