புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைமுடியை தானம் வழங்கிய கல்லூரி மாணவி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைமுடியை தானம் வழங்கிய கல்லூரி மாணவி;

Update: 2022-10-07 18:45 GMT

கூடலூர்

பந்தலூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் லட்சுமி ஆகியோரின் மகள் அனிதா என்பவர். கூடலூர் கலை அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார். அக்டோபர் மாதம் பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக உள்ளது. இதையடுத்து பந்தலூர் பகுதியை சேர்ந்த மாகாத்மா காந்தி பொது சேவை மைய உறுப்பினரும் கல்லூரி மாணவியுமான அனிதா தனது முடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக வழங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் முன்னிலையில் மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌஷாத் இடம் முடியை தனமாக அனிதா வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்