ஆட்டோ டிரைவரை தாக்கியவருக்கு 5 ஆண்டு சிறை

ராஜாக்கமங்கலம் அருகே ஆட்டோ டிரைவரை தாக்கியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-10-13 18:45 GMT

நாகர்கோவில், 

ராஜாக்கமங்கலம் அருகே ஆட்டோ டிரைவரை தாக்கியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

டிரைவர் மீது தாக்குதல்

ராஜாக்கமங்கலம் போலீஸ் சரகம் காரவிளையை சேர்ந்தவர் பிரித்திவிராஜ் (வயது52). மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் ஜெயசீலன் (40), தச்சுதொழிலாளி. இவர்கள் 2 பேருக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காரவிளை சந்திப்பில் தகராறு ஏற்பட்டது.

அப்போது குடிபோதையில் இருந்த ஜெயசீலன், பிரித்திவிராஜை தாக்கியதாக தெரிகிறது. இதில் தலையில் படுகாயமடைந்த பிரித்திவிராஜ் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் ராஜாக்கமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயசீலனை கைது செய்தனர்.

5 ஆண்டு சிறை

பின்னர் அவரை, போலீசார் நாகர்கோவிலில் உள்ள இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி அசன் முகமது விசாரித்து வந்தார். நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயசீலனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு குற்றவியல் வக்கீல் செந்தில் மூர்த்தி ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்