செலவுக்கு பணம் தராததால்தாயை தாக்கியவர் மீது வழக்கு

பெரியகுளம் அருகே செலவுக்கு பணம் தராததால் தாயை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-01-02 18:45 GMT

பெரியகுளம் அருகே உள்ள சரத்துப்பட்டியை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 60). இவரது மகன் ஆண்டவர் (40). நேற்று ஆண்டவர், தனது தாயிடம் செலவுக்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது நாகம்மாள் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆண்டவர், நாகம்மாளை தாக்கினார். இதில் காயமடைந்த நாகம்மாள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தென்கரை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஆண்டவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்