அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

Update: 2023-10-06 18:45 GMT

சிங்கம்புணரி

விலையில்லா சைக்கிள்கள்

சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட முறையூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது, விழாவிற்கு மாவட்ட திட்ட இயக்குனர் சிவராமன் தலைமை தாங்கினாா். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு சொந்த நிதியில் அமைச்சர் ரொக்க பரிசுகளை வழங்கினார். முன்னதாக அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பனுக்கு முறையூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் தலைமையில் மாவட்ட அவைத் தலைவர் கணேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் அம்பல முத்து, சோமசுந்தரம், சிங்கம்புணரி நகர அவைத்தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் கதிர்வேல் ஆகியோர் வரவேற்றனர்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மதிவாணன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சீலா சொக்கநாதன், சிவபுரிசேகர், முத்துக்குமார், முறையூர் கிளை கழகம் கோபாலன், சாமியாடி சொக்கநாதன், முறையூர் ஊராட்சி துணை தலைவர் கதிரேசன், சிங்கம்புணரி தாசில்தார் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லெட்சுமணராஜ், ராஜேந்திர குமார், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை தலைவர் ஆனந்த கிருஷ்ணன், பேரூராட்சி துணைத்தலைவர் இந்தியன் செந்தில், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் சூரக்குடி சிவசுப்பிரமணியன், தருண் மெடிக்கல் புகழேந்தி, ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட தொழிலாளர் அணி துணைத் தலைவர் ஞானிசெந்தில் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கோவில் கண்காணிப்பாளர் மாணிக்கம் தங்கவேல், கருப்பையா, பாஸ்கரன், முன்னாள் மாணவர் சங்கச் செயலாளர் ஜோதிமணி, ஆசிரியர் சின்னத்தம்பி, சக்திவேல், சந்திரன், பீர்முகமது, கரு செந்தில், ஜீவா, மருதுபாண்டி, சின்னத்தம்பி மணிகண்டன் சின்னையா, வீர பழனி, மணிவண்ணன், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி துணை தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்