மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.7,500 அரசு மானியம்

இளையான்குடி வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் சீமைகருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு மானியமாக ரூ.7500 வழங்கப்படும் என தோட்டக்கலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-03 18:45 GMT

இளையான்குடி, 

இளையான்குடி வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் சீமைகருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு மானியமாக ரூ.7500 வழங்கப்படும் என தோட்டக்கலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீமைகருவேல மரங்கள்

இளையான்குடி வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு காய்கறி நாற்றுக்கள், பழக்கன்றுகள் சாகுபடி செய்யவும், மழை நீர் சேமிக்க பண்ணை குட்டை அமைக்கவும், விவசாய உரங்கள், இயற்கை உரங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தில் நடப்பாண்டில் புதிய திட்டமாக விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி விவசாய நிலமாக மாற்றி மிளகாய் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு 50 சதவீத மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.7500 வழங்கப்படும். மேலும் விவசாயம் செய்ய ஏதுவாக நுண்ணுயிர் பாசன கருவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேற்கூறிய திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்தின் பட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், மற்றும் போட்டோவுடன் இளையான்குடி யூனியன் அலுவலகத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகுமாறு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் பாண்டியராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

பயனடையலாம்

நச்சு வகை மரங்களான கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றி விளைநிலங்களாக மாற்றுவதற்கு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தமிழ்நாடு அரசின் விவசாய மேம்பாட்டு திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பண பயிரான மிளகாய் சாகுபடி செய்ய விவசாயிகளை தோட்டக்கலைத் துறை சார்பாகவும் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்