கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்குசிறப்பு கட்டுப்பாட்டு அறை:கலெக்டர் தகவல்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்கு சிறப்பு கட்டுப்பாறை அமைக்கப்பட்டுள்ளது என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2023-07-16 18:45 GMT

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காகவும், தங்கள் பகுதியில் முகாம் நடைபெறும் இடம், நாள் மற்றும் பல்வேறு விவரங்கள் குறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்காகவும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் 5 தாலுகா அலுவலகங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைகளை, கலெக்டர் அலுவலகம்- 04546-250101, தேனி தாலுகா அலுவலகம்- 04546-255133, போடி - 04546-280124, பெரியகுளம்- 04546-231215, ஆண்டிப்பட்டி- 04546-290561, உத்தமபாளையம்- 04554-265226 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்