பள்ளி மாணவர்களுக்கு கால்பந்து போட்டி
பாளையங்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு கால்பந்து போட்டி தொடங்கியது.;
நெல்லை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
நெல்லை மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 17 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 17 அணிகளாக இந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்றனர். இவர்களுக்கு பல சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகிற 31-ந்தேதி இறுதி சுற்று நடத்தப்படும். அதில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு வெற்றி கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட இருக்கிறது. மேலும் இதில் வெற்றி பெறும் அணிகள் அடுத்தகட்டமாக மாநில அளவில் நடைபெறும் கால்பந்து போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.