ஆனைமலையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆனைமலையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆனைமலை
ஆனைமலை தாசில்தார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அப்போது அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வேண்டுதல், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அன்னபூரணி, பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.