சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-29 19:00 GMT

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிக்காளை கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில செயலாளர் ஜெசி சிறப்புரையாற்றினார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி, தமிழ்நாடு அரசுஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் நடராஜன் உள்பட பலர் பங்கேற்று பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாநில துணைப்பொதுச்செயலாளர் மங்களபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் சுந்தரி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்