சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் சத்துணவு ஊழியர்கள் சார்பில் மடியேந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
திருப்பத்தூர் மாவட்ட சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு மடியேந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் பழனி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பிரேம்குமார் தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் காலை உணவு திட்டத்தை, சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல் படுத்த வலியுறுத்தியும், காலி பணியிடங்களை நிரப்பக் கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். இறுதியில் சங்கரி நன்றி கூறினார்.