சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம்

சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடத்தினர்.

Update: 2022-11-25 18:12 GMT

ராணிப்பேட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மாலை ராணிப்பேட்டை காரை கூட்டு ரோடு முதல் கலெக்டர் அலுவலகம் வரை கவன ஈர்ப்பு ஊர்வலம் நடந்தது. மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

ஊர்வலம் முடிவில் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஊர்வலத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்