கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

திருப்பத்தூரில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2023-07-25 18:34 GMT

திருப்பத்தூர் நகராட்சி மற்றும் கந்திலி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் எம்.பழனிசாமி கந்திலி ஒன்றிய பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தார். அப்போது இரண்டு இனிப்பகங்களில் அரசு தடை செய்துள்ள பிளாஸ்டிக் கவர் இரண்டு கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இரண்டு இனிப்பகத்திற்கும் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

ஒரு மளிகைக் கடையில் ஒரு கிலோ கம்ப்யூட்டர் இலை பறிமுதல் செய்யப்பட்டு, அந்த கடைக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு இனிப்பகத்தில் ஜாங்கிரி மற்றும் அல்வா அதிக வண்ணம் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த கடைக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இனிப்பக உரிமையாளர்களுக்கு இனிப்பதற்கு இனிப்புகளில் அதிக வண்ணம் சேர்க்கக்கூடாது எனவும், இனிப்பு செய்யும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்