உணவு பாதுகாப்பு உரிமம் பதிவு செய்யும் முகாம்
சாத்தான்குளத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் சான்றிதழ் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு சாத்தான்குளம் வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.ஆர்.சசிகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன், உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு வியாபாரிகளிடம் உணவு பாதுகாப்பு உரிமம் சான்று பெற பதிவு செய்தனர். இதில் சுமார் 60-க்கு மேற்பட்ட வியாபாரிகள் பதிவு செய்தனர்.
இம்முகாமானது வரும் 27-ந் தேதி மீண்டும் நடத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு உரிமம் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் வியாபாரிகள் சங்க துணை தலைவர் கண்ணன், சங்க செயலர் மதுரம் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.