உணவு தானிய உற்பத்தி இலக்கு 4.84 லட்சம் டன்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு உணவு தானிய பயிர் உற்பத்தி இலக்கு 4.84 லட்சம் டன் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி கூறினாா்.;
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு உணவு தானிய பயிர் உற்பத்தி இலக்கு 4.84 லட்சம் டன் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி கூறினாா்.
குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோாிக்கைகள் குறித்து பேசினர். பின்னர் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு உணவு தானிய பயிர்களின் உற்பத்தி இலக்கு 4.84 லட்சம் டன்களாக பெறப்பட்டுள்ளது.நடப்பு சம்பா, தாளடி பருவத்துக்கு நீண்டகால மற்றும் மத்திய கால நெல் ரக விதைகளான ஆடுதுறை 51, சி.ஆர்.1009 சப்-1, டி.கே.எம்.13 ஆகிய விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விதை கிராம திட்டத்தில் ஒரு கிலோவிற்கு ரூ.17.50 மானியமும் மற்றும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை விவசாயிகளுக்கு 312 டன் விதைகள் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 618 டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது.
உரம்
மயிலாடுதுறை மாவட்டத்துக்கு செப்டம்பர் மாத ஒதுக்கீடாக 3730 டன் யூரியா, 1120 டன் டி.ஏ.பி, 780 டன் பொட்டாஷ், 1310 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 160 டன் சூப்பர்பாஸ்பேட் என மொத்தம் 7100 டன் பெறப்பட்டுள்ளது. இதில், இதுவரை 2089 டன் யூரியா, 165 டன் டி.ஏ.பி, 398 டன் காம்ளக்ஸ், 232.8 டன் பொட்டாஷ் மற்றும் 10 டன் சூப்பர் பாஸ்பேட் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.தற்போது 2341 டன் யூரியா, 939 டன் டி.ஏ.பி, 636 டன் பொட்டாஷ், 845 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 78 டன் சூப்பர்பாஸ்பேட் என மொத்தம் 4839 டன் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விதைப்பு பொய்த்தல்
பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்ட வழிகாட்டு நெறிமுறையின்படி விதைப்பு பொய்த்தல் இனத்தின் கீழ் சீர்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனார்கோயில் வட்டாரங்களில் 75 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட 87 கிராமங்களுக்கு முதல் தவணையாக 38, 650 விவசாயிகளுக்கு ரூ.49.68 கோடி விடுவிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.இதில் ரூ.95.9 லட்சம், 485 விவசாயிகளுக்கு வங்கி கணக்கு சரிபார்க்க இயலாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த இன்சூரன்ஸ் நிறுவனத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினர்.கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமல்ராஜ், வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், மாவட்ட கலெக்்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.