ஆவின் பால் விலையை தொடர்ந்து நெய் விலையும் லிட்டருக்கு ரூ.50 உயர்வு..!

ஆவினில் நெய் விலை ஒரு லிட்டர் ரூ.580ல் இருந்து ரூ.630 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

Update: 2022-12-16 05:06 GMT

சென்னை,

ஆவின் பால் விலை ஏற்கெனவே உயர்த்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது நெய்யின் விலையும் லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெய் விலை உயர்த்தப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய விலை உயர்வின் படி, ஒரு லிட்டர் நெய் ரூ.580ல் இருந்து, ரூ.630 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல்,. 5 லிட்டர் நெய், 2,900 ரூபாயில் இருந்து, 3,250 ரூபாயாகவும், 500 மி.லி நெய் 290 ரூபாயில் இருந்து 315 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

200 மி.லி ரூ.130ல் இருந்து 145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மேலும், இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நெய் விலை உயர்த்தப்பட்டு இருப்பது ஏழை எளிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 


Full View


Tags:    

மேலும் செய்திகள்