கள்ளக்குறிச்சியில்சாலை விதிகளை பின்பற்றி ஆட்டோக்களை இயக்க வேண்டும்டிரைவர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் அறிவுரை

கள்ளக்குறிச்சியில் சாலை விதிகளை பின்பற்றி ஆட்டோக்களை இயக்க வேண்டும் என்று டிரைவர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் அறிவுரை வழங்கினாா்.

Update: 2023-02-11 18:45 GMT


கள்ளக்குறிச்சியில் சாலை விதிகளை கடைபிடிப்பது தொடர்பாக, ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் முன்னிலை வகித்தார்.

துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசுகையில், அரசால் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் ஆட்டோக்களை இயக்குவது, குறுகிய சாலை மற்றும் வளைவுகளில் மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும். ஆட்டோக்களின் நிலையை தினசரி கண்காணித்த பின்னர் தான் இயக்கிட வேண்டும். சாலை விதிகள் அனைத்தையும் முழுமையாக கடைபிடித்து விபத்து ஏற்படாமல் கவனமுடன் ஆட்டோக்களை இயக்க வேண்டும் என்று டிரைவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் செல்வம், மாவட்ட செயலாளர் வேல்மணி, மாவட்ட பொருளாளர் சையத்சர்தார், நகர் ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் மணிகண்டன், செயலாளர் நடராஜ், பொருளாளர் ரஹூப் உள்பட 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்