திருச்சியில் நாளை மறுநாள் வரை டிரோன்கள் பறக்க தடை
டிரோன்கள் பறக்க தடை என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
திருச்சியில் நாளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய உள்ளதால் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதல் அமைச்சரின் பாதுகாப்பு கருதி நாளை மற்றும் நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.