காய்ச்சல் பரிசோதனை முகாம்கள்; இன்று நடக்கிறது

காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் இன்று நடக்கிறது.

Update: 2023-09-03 19:15 GMT

காய்ச்சல் பரிசோதனை முகாம்

திருச்சி மாநகராட்சி சார்பில் மாநகர பகுதிகளில் செயல்பட்டு வரும் 18 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் இன்று (திங்கட்கிழமை) பல்வேறு இடங்களில் காலை, மாலை நேரங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடக்கிறது. முகாம் நடைபெறும் இடங்கள் விவரம் வருமாறு:- இன்று காலை கெம்ஸ்டவுன், ராணிதெரு, பெரியார்நகர், விறகுப்பேட்டைதெரு, பஞ்சவர்ணசாமி கோவில் சன்னதிதெரு, வரகனேரி மருந்தகம், மகாலெட்சுமிபுரம், ஜோதிபுரம், மலையடிவாரம், கோனார்தோப்பு, குளத்துமேடு, சரஸ்வதிதோட்டம், உஸ்மான்அலிதெரு, தேவதானம், மூலக்கொல்லைதெரு, எல்லக்குடி, நெல்சன்ரோடு, பாளையம்பஜார் ஆகிய பகுதிகளில் முகாம் நடக்கிறது.

மாலையில்...

இன்று மாலை செபஸ்தியார்கோவில்தெரு, சின்னகம்மாளதெரு, அந்தோணியார்கோவில்தெரு, மிஷன்கோவில்தெரு, நவாப்தோட்டம், வரகனேரி வள்ளுவர்நகர், கவிபாரதிநகர், அண்ணாநகர், பொன்னேஸ்வரம், பழைய தபால்நிலையரோடு, நெசவாளர்காலனி, ராகவேந்திரபுரம், அண்ணாதெரு டி.வி.எஸ்.டோல்கேட், சஞ்சீவிநகர், ரெஜிமண்டல் பஜார், கொக்கரசம்பேட்டை, அம்பேத்கார்நகர், மேட்டுத்தெரு ஆகிய பகுதிகளில் முகாம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்