நேரு பூங்காவில் மலர்கள் அழுகின

தொடர் மழையால் நேரு பூங்காவில் மலர்கள் அழுகின.

Update: 2023-08-05 21:30 GMT

கோத்தகிரி

கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் நேரு பூங்கா உள்ளது. இந்த பூங்காவை காண தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். கடந்த மே மாதம் கோடை சீசனுக்கு பூங்காவை தயார்படுத்தும் வகையில், ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூங்கா மேம்படுத்தப்பட்டது. கோடை சீசனில் காய்கறி கண்காட்சிக்காக 30 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு, மலர்கள் பூத்து குலுங்கி கடந்த மே மாதத்தில் பூங்கா கண்ணை கவரும் வகையில் காட்சி அளித்தது. ஆனால், தொடர்ந்து கடந்த 2 மாதங்கள் பெய்த மழையின் காரணமாக மலர்கள் அழுகியும், காய்ந்தும் காணப்படுகிறது. இதனால் பூங்கா பொலிவிழந்து காட்சி அளிக்கிறது. தற்போது 2-வது சீசனுக்காக பூங்காவிலேயே தயார் செய்த 1,000 மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. ஆனால், பெரும்பாலான பகுதியில் மலர் நாற்றுகள் நடவு செய்யப்படவில்லை. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்கள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்