புற்றடி மகாசக்தி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

புற்றடி மகாசக்தி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.;

Update: 2023-03-21 20:11 GMT

திருவரங்குளம் அருகே உள்ள பாரதியார் நகர் புற்றடி மகாசக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குள நாதர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மனை எழுந்தருள செய்து பூக்களை பக்தர்கள் தட்டில் கையில் ஏந்தியவாறு வாணவேடிக்கை, மேளதாளத்துடன் தேரோடும் நான்கு வீதிகளிலும் வலம் வந்தனர். அதன்பின்னர் மகாசக்தி மாரியம்மன் பாதத்தில் பூக்களை சாற்றி வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 26-ந் தேதி மகாசக்தி மாரியம்மனுக்கு காப்புக்கட்டி பங்குனி திருவிழா நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்