தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் பூ விற்கும் போராட்டம்
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் பூ விற்கும் போராட்டம் நடத்த தெருவியாபார சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்ட தெரு வியாபார சங்க கூட்டத்தின் தஞ்சை கிளை நிர்வாகிகள் கூட்டம் ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார், மாவட்ட தலைவர் சேவையா, செயலாளர் துரை.மதிவாணன், உடல் உழைப்பு சங்க மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தராஜன், நுகர்பொருள் தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சை பழைய பஸ்நிலையம் எதிர்புறம் பூ மற்றும் வளையல் உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்யும் தொழிலாளர்களை, பஸ்நிலையம் புதுப்பிக்கப்பட்ட பிறகு அங்கு விற்ககூடாது என மாநகராட்சி அதிகாரிகள் கூறிஉள்ளனர். இது தொடர்பாக கலெக்டர், மாநகராட்சி ஆணையர், போலீஸ் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், மீண்டும் அதிகாரிகள் பூ விற்பனை செய்ய அனுமதிக்கவில்லை. இதனை கண்டிப்பதுடன், பூ விற்பனை செய்ய அனுமதிக்ககோரி வருகிற 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாநகராட்சி அலுவலகத்தில் பூ விற்கும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் கிளை நிர்வாகிகள் கண்ணன், பிரகாஷ், சத்யா, மஞ்சுளா, வெண்ணிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்