விலை சரிவால் மணக்காத பூ மார்க்கெட்
திருப்பூர் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை அடியோடு சரிந்தது. ஒரு கிலோ செண்டுமல்லி ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.;
திருப்பூர் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை அடியோடு சரிந்தது. ஒரு கிலோ செண்டுமல்லி ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
கடும் விலை சரிவு
ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் பூக்களின் விற்பனை நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் திருப்பூர் பூ மார்க்கெட்டில் வியாபாரிகள் அதிக அளவில் பூக்களை விற்பனைக்கு குவித்திருந்தனர். ஆனால் நேற்று எதிர்பார்த்த அளவிற்கு விற்பனையும் இல்லை. விலையும் இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று கிலோ ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் காலையில் பூக்களின் விலை ஓரளவு இருந்த நிலையில் மதிய ேவளைக்கு மேல் பெருமளவில் விலை குறைந்தது. முல்லைப்பூ ரூ.160-ல் இருந்து ரூ.80 -ஆக குைறந்தது. ஜாதிமல்லி ரூ.320-ல் இருந்து ரூ.200 -ஆக குறைந்தது.
வியாபாரிகள் ஏமாற்றம்
இதேபோல் செவ்வந்தி ரூ.160-ல் இருந்து ரூ.100-ஆக குறைந்தது. சம்பங்கி கிலோ ரூ.120, அரளி ரூ.80, பெங்களூர் ஸ்டார் ரோஜா ரூ.100, கலர் ரோஜா ரூ.120 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன. குறிப்பாக ஓணம் பண்டிகை நாளில் கோலம் போடுவதற்கு செவ்வந்தி பூவைப்போன்று செண்டுமல்லியும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் என்பதால் இந்த பூக்கள் மார்க்கெட்டில் அதிக அளவில் வைக்கப்பட்டிருந்தது.
காலையில் இந்த பூ கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேரம் செல்ல, செல்ல கிலோ ரூ.20-க்கு இறங்கியது. விலை மிகவும் குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.