விவசாயிகளுக்கு மலர், காய்கறி சாகுபடி பயிற்சி

விவசாயிகளுக்கு மலர், காய்கறி சாகுபடி பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-11-04 17:07 GMT

திமிரி வட்டார வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மலர் மற்றும் பழம், காய்கறி பயிர் பாதுகாக்கப்பட்ட சாகுபடி தொழில் நுட்பம் குறித்து கண்டுணர் சுற்றுலா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தோட்டக்கலை கல்லூரி முதல்வர் ரத்தின சபாபதி தலைமை தாங்கி கலவை பகுதி விவசாயிகளுக்கு மலர், பழம் மற்றும் காய்கறி சாகுபடி குறித்து எடுத்துரைத்தார். ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி முதல்வர் பானுதாஸ் விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட ரகங்கள் பயிரிட வேண்டும், பழம், காய்கறி, மலர் போன்ற விவசாயம் செய்பவர்களுக்கு வருமானம் அதிகம் கிடைக்கும். அரசு மானியமும் வழங்கப்படுகிறது. இயற்கை முறையில் பயிர்கள் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

அட்மா திட்ட மேலாளர் ராஜேஷ், உதவி தொழில்நுட்ப மேலாண்மை கோபாலகிருஷ்ணன் மற்றும் கலவை, கலவை புத்தூர், வெள்ளம்பி ஆகிய பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்