பாலத்தில் மோட்டார்சைக்கிள் மோதி பூ வியாபாரி உயிரிழப்பு
பாலத்தில் மோட்டார்சைக்கிள் மோதி பூ வியாபாரி உயிரிழந்தார்.;
காளையார்கோவில்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தென்றல் நகரை சேர்ந்தவர் காளை (வயது 50). இவர் காளையார்கோவில் பஸ் நிலையத்தில் பூக்கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் ஊரில் இருந்து ஆண்டிச்சியூரணி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.