தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
திருச்சி அரசு மருத்துவமனை முன்பு தரைக்கடை நடத்தி பிழைத்து வருபவர்களை, ஒருசிலருக்கு ஆதரவாக செயல்பட்டு அங்கு கடை போடக்கூடாது என்று மிரட்டும் போக்குவரத்து போலீசாரை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ராமர், மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்வி மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு, போக்குவரத்து போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.