தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!

இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-12-10 01:38 GMT

கோப்புப்படம் 

தூத்துக்குடி, 

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழக பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதியில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக தென் தமிழக பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று மழை வெளுத்து வாங்கியது.

மேலும், தாமிரபரணி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி, திருவைகுண்டம், மருதூர், கலியாவூர், புன்ன காயல் ஆகிய பகுதி மக்களுக்கு கலெக்டர் லட்சுமிபதி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்