சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மணல் மூட்டைகள் வைத்து சாலைகள் தற்காலிக சீரமைப்பு
பிரதான சாலையில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டதால், சுற்றுப்புற கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.;
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாதல்படுகை, வெள்ளைமணல், கோரைத்திட்டு உள்ளிட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பிரதான சாலையில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், சுற்றுப்புற கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனிடையே அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் வர முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து சாலைகளில் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகளை வைத்து தற்காலிகமாக சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. எனினும் பருவமழைக்காலம் என்பதால் அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.