சென்னை விமான நிலையத்தில் விமான சேவை சீரானது
சென்னையில் விமான சேவை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது.;
ஆலந்தூர்,
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் கடந்த 2 நாட்களாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. புயல் கரையை கடந்த போது 2 மணி நேரம் ஒடுபாதை மூடப்பட்டது. இதனால் விமான சேவைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. உள்ளாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் புறப்பாடு மற்றும் வருகை பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
தற்போது பலத்த மழை, காற்று இல்லாததால் சென்னையில் விமான சேவை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது. அனைத்து விமானங்களின் புறப்பாடு, வருகை சரியான நேரத்திற்கு மாறி உள்ளதாக கூறப்படுகிறது.